செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 18 ஏப்ரல் 2020 (11:17 IST)

பொருளாதாரத்தை பாதிக்காத ஊரடங்கு! - துருக்கியின் புதிய வழிமுறை!

கொரோனா பாதிப்பால் பல நாடுகள் ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில் துருக்கு பொருளாதாரம் பாதிக்காத வகையில் ஊரடங்கை நிறைவேற்றி வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளின் காரணமாக பல நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இதனால் பல நாடுகளில் வேலையின்மை, பொருளாதார சரிவு உள்ளிட்டவை ஏற்பட்டு வருகிறது. ஆனால் துருக்கி தனது பொருளாதாரம் சரியாத அளவிற்கு ஊரடங்கை சில மாற்றங்களுடன் செயல்படுத்தி வருகிறது.

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள முக்கிய நாடுகளில் துருக்கியும் ஒன்று. ஆனால் அங்கு வாரத்திற்கு இருநாட்கள் மட்டுமே ஊரடங்கு அமல்படுத்தப்படுகின்றன. வார இறுதி நாட்களில் சிறியவர்கள், பெரியவர்கள் வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் பார்சலுக்கு மட்டும் அனுமதி, வங்கிகள் பகுதி நேரமாக இயங்குதல் உள்ளிட்ட சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கட்டுமான பணிகள் பாதிக்கப்படாதவாறு கவனித்து கொள்ளும் துருக்கி அரசு ஊழியர்களுக்கு தேவையான கால அவகாசத்தில் விடுமுறை, முகக்கவசங்கள் வழங்குதல், சமூக இடைவெளியை அனைத்து இடங்களிலும் கடைபிடிக்க தேவையானவற்றை செய்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

இதனால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாகவும், அதேசமயம் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை காணாமல் உள்ளதாகவும் அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.