1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 18 ஏப்ரல் 2020 (10:34 IST)

நாட்டிலேயே தமிழகத்தில் தான் கொரோனா ஹாட் ஸ்பாட் அதிகம்...

மத்திய அரசு அறிவித்துள்ள ஹாட்ஸ்பாட் பகுதிகள் தமிழகத்திலே அதிகம் உள்ளதாக தெரிகிறது. 
 
கடந்த மாதம் முதலாக இந்தியாவில் தீவிரம் காட்ட துவங்கிய கொரோனா வைரஸால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
 
இந்நிலையில் ஊரண்டாம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், ஏப்ரல் 20 ஆம் தேதி சில தளர்வுகள் கொண்டுவரப்படவுள்ளது. ஆனால், இவரை கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகளுக்கு பொருந்தாது. மத்திய அரசு அறிவித்துள்ள ஹாட்ஸ்பாட் பகுதிகள் தமிழகத்திலே அதிகம் உள்ளதாக தெரிகிறது. 
 
ஆம், தமிழகத்தின் 22 மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட் பகுதிகளாக இடம் பெற்றுள்ளன. சென்னை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, ஈரோடு, வேலூர், திண்டுக்கல், விழுப்புரம், திருப்பூர், தேனி, நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, தூத்துக்குடி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, கடலூர், திருவள்ளூர், திருவாரூர், சேலம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டிய மாவட்டங்களாக உள்ளன. 
 
அதேநேரம், பாதிக்கப்பட வாய்ப்பு உள்ள மாவட்டங்களாக 7 தஞ்சாவூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சிவகங்கை, நீலகிரி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.