வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 9 பிப்ரவரி 2023 (17:22 IST)

மேகாலயா மாநிலத்தில் லேசான நிலநடுக்கம்!

megalaya
மேகாலயா மாநிலத்தில் உள்ள  துரா அருகே  லேசான  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மேற்கு ஆசிய நாடான துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில், 10 ஆயிரத்திற்கும் அதிமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

பல ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த நில நடுக்கம் பற்றி டச்சு ஆய்வாளர் ஹூக்ர்பீட்ஸ் முன்கூட்டியே கணித்திருந்தார்.

இந்த  நிலையில், இவர், இந்தியாவிலும் நில நடுக்கம் ஏற்படலாம் என்று கணித்துள்ளார்.

இந்த நிலையில், இன்று மேகாலயா துரா அருகே  லேசான  நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இது ரிக்டர் அளவுகோலில் 3 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

இது அப்பகுதியில் உள்ள மக்களிடையே அச்சயத்தை ஏற்படுத்தியுள்ளது.