1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Elon musk approach to bought twitter

ட்விட்டர்ல பங்கு வேணாம்.. ட்விட்டரே வேணும்! – மாஸ் காட்டிய எலான் மஸ்க்!

Elon Musk
சமீபத்தில் தொழிலதிபர் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தையே வாங்க விலை பேசியதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெஸ்லா கார் நிறுவனம், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆராய்ச்சி மையம் உள்ளிட்டவற்றின் நிறுவனர் எலான் மஸ்க். உலக கோடீஸ்வரர்களில் முதலிடத்தில் உள்ள எலான் மஸ்க் சமீபத்தில் பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் 9 சதவீத பங்குகளை வாங்கினார்.

இதை தொடர்ந்து ட்விட்டர் நிர்வாக குழுவில் அவரை இடம்பெற அழைத்ததற்கு அவர் அதை மறுத்துவிட்டது பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது எலான் மஸ்க் ட்விட்டரையே மொத்தமாக வாங்க பேச்சு வார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக அவர் ட்விட்டரில் வாங்கிய 9 சதவீத பங்குகளே 3 பில்லியன் டாலர் பெருமானம் கொண்டது. எலான் மஸ்க்கின் இந்த செயல் கார்ப்பரேட் நிறுவனங்களையே வாய் பிளக்க செய்துள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
விருந்துக்கு வரலைன்னா செலவு மிச்சம்! – திமுக முடிவு குறித்து அண்ணாமலை!