புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (09:31 IST)

சூறாவளியை அணுகுண்டால் தடுக்க யோசனையா??.. டிரம்ப் கேட்ட விசித்திரமான கேள்வி

சூறாவளிகளை அணுகுண்டுகளை பயன்படுத்தி தடுக்க முடியுமா? என அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டதாக ஊடகத்தில் செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆஃப்ரிக்க கடலோர பகுதியில் உருவாகும் சூறாவளிகள், அட்லாண்டிக் கடல் மீது நகர்ந்து வரும்போது, சூறாவளியின் மையப் பகுதியில் அணுகுண்டு வீசி தடுக்க முடியுமா? என அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளிடம் பல சந்தர்ப்பங்களில் கேட்டுள்ளதாக அந்நாட்டின் இணையதள ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளன.

இது குறித்து டிரம்ப் தரப்பிலிருந்து எந்த கருத்தும் இதுவரை வெளிவரவில்லை. ஆனால் டிரம்பிற்கு முன்பே, 1950 ல் எய்சன்ஹோவர் என்பவர் அமெரிக்க அதிபராக இருந்தபோது, டிரம்ப் கூறிய இதே கேள்வியை அவரும் கேட்டுள்ளார் என கூறப்படுகிறது. இந்த கேள்விக்கு விஞ்ஞானிகள் சாத்தியமில்லை என பதிலளித்துள்ளனர்.

இது குறித்து அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம், அணு வெடிப்பு சூறாவளிக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும், மேலும் அணுவெடிப்பால் ஏற்படும் கதிரியக்க வீழ்ச்சி சுற்றுசூழலுக்கு பெரும் சேதத்தை விளைவிக்கும் எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.