வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 16 நவம்பர் 2022 (11:29 IST)

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டி: டிரம்ப் அறிவிப்பு

Trump
அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட போவதாக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ட்ரம்ப் அதில் வெற்றி பெற்று அதிபரானார். அதன்பிறகு 2021 ஆம் ஆண்டு மீண்டும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மீண்டும் அமெரிக்காவை சிறந்த நாடாகவும் புகழ் பெற்ற நாடாகவும் மாற்றுவதற்காக தேர்தலில் போட்டியிட போகிறேன் என விளக்கமளித்துள்ளார்
 
தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் 2024ஆம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ள நிலையில் மீண்டும் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் நேருக்கு நேர் மோதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva