திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 15 நவம்பர் 2022 (07:46 IST)

அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேத்திக்கு திருமணம்: உலக தலைவர்கள் வருகை!

Joe Biden
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேத்திக்கு திருமணம் நடைபெற உள்ள உலகத் தலைவர்கள் அமெரிக்கா வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று  அமெரிக்க அதிபராக ஜோபைடன் பதவி ஏற்றார் என்பதும் அவர் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில் அமெரிக்க அதிபரின் பேத்தி நோமி என்பவரின் திருமணம் வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதுவரை அமெரிக்க வரலாற்றில் அதிபர்களின் மகன் மகள்களுக்கு மட்டுமே வெள்ளை மாளிகையில் திருமணம் நடந்துள்ள நிலையில் முதல் முறையாக அமெரிக்க அதிபரின் பேத்திக்கு திருமணம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
அமெரிக்க அதிபர் பேத்தியின் திருமணத்தில் கலந்து கொள்ள உலக தலைவர்கள் பலர் வருகை தந்து மணமக்களுக்கு வாழ்த்துத் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva