ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 21 அக்டோபர் 2021 (08:24 IST)

நீங்க யாருய்யா என்னை ப்ளாக் பண்றதுக்கு? – சொந்தமாக ஆப் உருவாக்கிய ட்ரம்ப்!

கடந்த சில மாதங்கள் முன்பாக அமெரிக்க முன்னாள் அதிபரின் சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில் தற்போது புதிய செயலியை தொடங்கியுள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த நவம்பரில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் தோற்ற நிலையில் ட்விட்டர், யூட்யூப் உள்ளிட்டவற்றில் தனது எதிர்ப்பை தெரிவித்து வந்தார். இந்நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் ட்ரம்ப் பேசுவதாக குறிப்பிட்டு ட்விட்டர், யூட்யூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவரது கணக்கு முடக்கப்பட்டது.

இந்நிலையில் அவற்றிலிருந்து வெளியேறிய அவர் தனது கருத்துகளை தெரிவிப்பதற்காக “ட்ரூத் சோஷியல்” என்ற செயலியை உருவாக்கியுள்ளார். இந்த செயலி தற்போது பீட்டா வெர்சனில் வெளியாகியுள்ள நிலையில், அடுத்த முதல் காலாண்டிற்குள் செயல்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.