யாரும் எங்கள ஜெயிக்க முடியாது.. நாங்கதான் இனிமே..! – கிம் ஜாங் அன் சூளுரை!

Kim Jong Un
Prasanth Karthick| Last Modified புதன், 13 அக்டோபர் 2021 (08:38 IST)
அமெரிக்காவை எதிர்கொள்ள சக்திவாய்ந்த ராணுவத்தை உருவாக்குவதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், வடகொரியா அடிக்கடி ஏவுகணை, அணு ஆயுத சோதனை உள்ளிட்டவற்றை மேற்கொள்வது உலக நாடுகளிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் வடகொரியா தங்களிடம் உள்ள ஆயுதங்களை கொண்டு பிரம்மாண்டமான ராணுவ கண்காட்சியை நடத்தியுள்ளது. அதில் பேசிய அதிபர் கிம் ஜாங் அன் “அமெரிக்காவின் விரோதபோக்கு மற்றும் அழுத்தத்தை சமாளிக்க வடகொரியாவின் ராணுவம் யாராலும் வெல்ல முடியாத சக்திவாய்ந்த ராணுவமாக மாற்றப்படும்” என கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :