வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 16 ஜூலை 2019 (11:15 IST)

பெண் எம்.பி.க்களுக்கு எதிராக ஜனாதிபதியின் சர்ச்சைக்குறிய கருத்து…அரசியல் தலைவர்கள் கண்டனம்

பெண் எம்.பி.க்களுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி, இனவெறி கருத்துகளை பேசியதால் அந்நாட்டில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ”அமெரிக்கா அமெரிக்க மக்களுக்கே” என்ற கொள்கையை விடாப்பிடியாக கடைபிடித்து வருவதால், பிற நாடுகளில் பிறந்து அமெரிக்காவில் குடியுரிமைப் பெற்றவர்கள் மீது இனவெறி கருத்துகளை பேசி வருகிறார். இதனால் அவர் அடிக்கடி பல சர்ச்சைகளில் சிக்கிகொள்கிறார்.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அமெரிக்க நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி.க்களை குறிக்கும் வகையில், ”சிலர் அமெரிக்காவை மிகவும் வெறுக்கிறார்கள். அவர்கள் அமெரிக்காவில் இருக்கவேண்டிய அவசியம் எதுவும் இல்லை. அவர்கள் எந்த நாட்டிலிருந்து வந்தார்களோ, அந்த நாட்டிற்கே திரும்ப செல்லட்டும்” என கருத்து தெரிவித்துள்ளார்.

ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி.க்களான ரஷிதா டலீப், ஒகாசியோ கோர்டெஸ், ஐயானா பிரெஸ்ஸி மற்றும் இல்ஹான் உமர் ஆகியோரை குறிப்பிட்டே இவ்வாறு டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது. இந்த நான்கு எம்.பி,க்களின் பூர்வீகம் அமெரிக்கா அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. ரஷிடா டலீப் பாலீஸ்தானத்தை பூர்வீகமாக கொண்டவர். இவர் தான் அமெரிக்கவின் முதல் பாலீஸ்தீனத்தைச் சேர்ந்த பெண் எம்.பி. ஆகும். இல்ஹான் உமர் சோமாலியாவைச் சேர்ந்தவர். இவர் அமெரிக்காவின் முதல் கருப்பின பெண் எம்.பி. ஆவார். அதே போல ஒகாசியோ கோர்டெஸ் மற்றும் ஐயான பிரெஸ்லி ஆகியோர் அமெரிக்காவில் பிறந்தாலும், வேறு நாடுகளை பூர்வீகமாக கொண்டவர்கள்.

இந்த நாள்வரும் டிரம்பின் ஆட்சியைக் குறித்து தொடர்ந்து பல விமர்சனங்களை வைத்து வருவதால், டொனால்டு டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் இவர்கள் மீது இனவெறி கருத்துக்களை பகிர்ந்துள்ளார் என தெரியவருகிறது. டிரம்பின் இந்த இன்வெறி கருத்தை ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி.க்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.