செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 12 ஆகஸ்ட் 2020 (07:31 IST)

நடிகர் சஞ்சய்தத்துக்கு நுரையீரல் புற்றுநோய்? திரைப்படங்களில் இருந்து விலகுகிறாரா?

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அதனால் தற்போது அவர் நடித்து வரும் படங்களில் இருந்து விலக இருப்பதாகவும் வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சமீபத்தில் பிரபல நடிகர் சஞ்சய் தத்துக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதன் பின்னர் அவர் உடல் நலம் சீராகி டிஸ்சார்ஜ் ஆனார் 
இந்த நிலையில் அவருக்கு நுரையீரல் புற்றுநோய் பாதித்து இருப்பதாகவும், நான்காம் கட்டத்தில் இந்த புற்று நோய் இருப்பதால் அவர் உடனடியாக அமெரிக்கா சென்று சிகிச்சை செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது 
 
இதனை அடுத்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு சில மருத்துவ சிகிச்சைக்காக நான் என் வேலையில் இருந்து ஒரு குறுகிய கால ஓய்வு எடுக்கப் போவதாகவும் எனது குடும்பத்தினரும் நண்பர்களும் என்னுடன் இருப்பதால் என்னுடைய உடல்நிலை குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் உங்கள் அன்பு மட்டும் வாழ்த்துக்கள் உடன் நான் விரைவில் மீண்டு வருவேன் என்றும் கூறியுள்ளார்.இந்த பதிவை அடுத்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
கேஜிஎப் இரண்டாம்பாகம் உள்பட ஒரு சில முக்கிய படங்களில் சஞ்சய்தத் நடித்து வருவதால் அந்த படங்களில் இருந்து அவர் விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது