மினியன்ஸ் கார்ட்ரூன் கதாபாத்திரத்தின் சோகப் பின்னணி
மினியன்ஸ் கார்ட்டூன் கதாபாத்திரம், ‘டிஸ்பீக்கபுல் மீ’ திரைப்படத்தின் மூலம் உலக மக்களின் உள்ளம் கவர்ந்தவை. மினியன்ஸ் கார்ட்ரூன் உருவாகியதற்கு பின்னணியில் உள்ள கதையை தெரிந்துக்கொள்வோம்.
மினியன்ஸ் மஞ்சள் நிறத்தில் பளிச்சிடுவதுடன், குறும்பு சேட்டைகளால் சிரிப்பலையை உருவாக்கக் கூடியவை. ஆனால் அதன் பின்னணி சோகம் நிறைந்தவையாக இருக்கிறது.
இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரின் நாசி படைகள், யூதர்களை வேட்டையாடி கொன்று குவித்து கொண்டிருந்தன. அப்படி அனாதையான யூத குழந்தைகளை நாசிபடைகள் சிறைப்பிடித்து தங்களின் ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்தி கொண்டனர்.
இதில் ஏராளமானோர், ரசாயன வாயு தாக்கி இறந்ததாகவும், சிலருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் வரலாற்றில் கூறப்படுகிறது. அப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு, தலைகவசம் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த தலைகவசம் தான் மினியன்ஸின் தோற்றத்திற்கு முக்கிய காரணமாகும்.
இதை தவிர்த்து யூதர்கள் தங்களுக்கு தெரிந்த யூத மொழியில் பேசி வந்திருக்கிறார்கள். இது ஜெர்மனி பேசும் நாசி படைகளுக்கு உளறல் மாதிரி கேட்குமாம். அதுவே இன்றைய மினியன்ஸ் கதாபாத்திரத்தின் தாய்மொழியாக மாறிவிட்டது.