1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 6 ஜூலை 2022 (17:17 IST)

இன்று சர்வதேச முத்த தினம் ! ஹேஸ்டேக் டிரெண்டிங்

lover
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தைச் சேர்ந்தவை அல்ல என்று  ஒரு  சினிமா  படப் பாடலில் வரும். அப்படி மனித வாழ்க்கையில் மட்டும் அல்ல விலங்குகள், பறவைகளின் வாழ்க்கையில் இந்த முத்தம் என்பது அன்பின் வெளிப்பாடாக உள்ளது.

இந்த நிலையில்,  பெற்றோர் பிள்ளைகளுக்கு தரும் முத்தம், மனைவி கணவருக்கு தரும் முத்தம், காதலன் காதலிக்குத் தரும் முத்தம் இப்படி தனக்குப் பிடித்தவர்களுக்கும் உறவினர்களுக்கு முத்தம் கொடுப்பதுடன் இல்லாமல், மரியாதைக்குரியதாகவும் அது இருக்கிறது.

சமீபத்தில், ஒரு  வீட்டு மாடியில் பதுங்கிச் சென்ற ஒரு பூனை ஒன்று, அங்கிருந்த புறாவை நெருங்கியதும் அது என்ன  செய்யப்போகிறதோ என பதற்றமாக இருந்த நிலையில், அதற்கு முத்தமிட்டு அந்தப் பூனை திரும்பியது.  இதேபோல், ஒரு சிங்க கூட்டமே கூடி, ஒரு விலங்கு நல ஆர்வலரை கட்டியணைத்து முத்தமிட்டு விளையாடிய வீடியோ சமீபத்தில் வைரலானது.

முத்தம் என்பது அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. அது உயிர்களின் அடிப்படையில் பேதம் பார்க்கபட்டாலும் அதன் பொருள் அன்பின் வெளிப்பாடுதான். அந்த முத்தத்தில், கன்னத்தின் முத்தம் இடுவது அன்பிற்காக என்றும்,  நெற்றியில் முத்தம் பாசத்திற்காகவும், கைமேல் முத்தம் காதலுக்காக என்றும் இதழில் முத்தம் காமத்திற்காக என்றும் கூறப்படுகிறது.