இன்று சர்வதேச காபி தினம்
இன்றைய உலகில் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று காபி.
இன்று நவீன உலகில் எத்தனையோ விதமான காபி பிராண்டுகள் உலகில் உள்ளன. பல்வேறு நாடுகளில் பல்வேறு விதமான காபிகள் உள்ளன.
இந்தியாவில் பலர் இதை தொழிலாகவும் செய்து வருகின்றனர். மக்களும் காபியை குடிப்பதை வழக்கமாகவும் பொழுதுபோக்காகவும் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று சர்வதேச காபி தினத்தை முன்னிட்டு இணையதளத்தில் இதுகுறித்த பதிவுகள் டிரெண்டிங் ஆகி வருகிறது.