வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 20 பிப்ரவரி 2017 (06:14 IST)

இந்திய விஞ்ஞானிகளை கிண்டலடித்த அமெரிக்க ஊடகம். பதிலடி கொடுத்த கார்ட்டூன்

கடந்த 2014ஆம் ஆண்டு இந்திய விஞ்ஞானிகளை கார்ட்டூன் மூலம் கிண்டலடித்த அமெரிக்க ஊடகத்திற்கு டைம்ஸ் ஆப் இந்தியா அதே கார்ட்டூன் மூலம் தற்போது பதிலடி கொடுத்துள்ளது




அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் என்ற ஊடகம், கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியா செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் அனுப்பியபோது, 'மாடு மேய்ப்பவர்கள் எல்லாம் விண்கலம் விடுகிறார்கள் என்று கார்டூன் வெளியிட்டிருந்தது. இந்த கார்ட்டூனுக்கு இந்தியாவின் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் இந்தியாவின் உலக சாதனை நிகழ்வான 104 செயற்கைக்கொள்கள் ஒரே ராக்கெட்டில் விடப்பட்டிருந்தது. இதில் எட்டு செயற்கை கோள்கள் அமெரிக்காவை சேர்ந்தது. இதனை குறிக்கும் வகையில் டைம்ஸ் ஆப் இந்தியா ஒரு கார்ட்டூனை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் "மாடு மேய்ப்பவர்களான இந்தியரிடம் தான் அமெரிக்கர்கள் தங்களது செயற்க்கை கோளை விண்ணில் செலுத்துமாறு வேண்டி கொண்டனர் "என்ற குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிலடியை இந்தியர்கள் அனைவரும் ரசித்து வருகின்றனர்.