வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (18:26 IST)

கொரோனாவால் இந்த படத்தைத் தேடி பார்க்கும் இளைஞர்கள்! எந்த படம் தெரியுமா?

கொரோனா பரவலால் வைரஸ் சம்மந்தப்பட்ட படங்களை மக்கள் இணையங்களில் அதிகமாகத் தேடிப் பார்த்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் காரணமாக உலகமே இப்போது வீடுகளில் முடங்கியுள்ளது. இந்நிலையில் அனைவரும் தங்கள் பொழுதுபோக்கிற்காக இணையத்தில் படங்கள் மற்றும் சீரிஸ்களை பார்க்க ஆரம்பித்துள்ளனர். அதிலும் முக்கியமாக வைரஸ் பரவல் சம்மந்தப்பட்ட படங்களை அதிகமாகப் பார்க்கப் படுகின்றனர்.

2011 ஆம் ஆண்டு ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸோடன்பெர்க் இயக்கி வெளியான காண்டஜியன் என்ற படம்தான் அதிகமாகப் பார்க்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம் கொரொனா போன்ற ஒரு கொடூரமான வைரஸ் எப்படி உருவாகி, அது மக்களுக்கு பரவி எப்படி பேரழிவை ஏற்படுத்துகிறது என்பதை விலாவாரியாக காட்டும் விதமாக படம்பிடிக்கப்பட்டு இருந்தது.

இதே போல ட்ரைன் டூ பூசன், வைரஸ், ஏழாம் அறிவி, தசாவதாரம் போன்ற படங்களைப் பற்றியும் இணையத்தில் இளைஞர்கள் விவாதித்து வருகின்றனர்.