செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 30 ஜூன் 2018 (12:03 IST)

அகதிகள் படகு மூழ்கியது: 100 பேரின் கதி என்ன?

அகதிகள் படகு மூழ்கியது: 100 பேரின் கதி என்ன?
லிபியாவில் அகதிகள் பயணித்த படகு மூழ்கியதால் 100 பேரைக் காணவில்லை. மேலும், 3 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
திரிபோலியின் காரபவுலியில் இருந்து நேற்று 120 அகதிகளை ஏற்றிகொண்டு படகு ஒன்று சென்றுள்ளது. இந்த படகின் என்ஜினில் ஏற்பட்ட கோளாறால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் நீர் கசிந்து உட்புகுந்ததில் படகு கடலில் மூழ்கியது.
 
இதில் பயணித்தவர்கள் கடலில் மூழ்கிக் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதை கண்ட அங்குள்ள மீனவர்கள் கடலோர பாதுகாப்பு படைக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த பாதுகாப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த கோர விபத்தில் சிக்கிய 3 குழந்தைளின் உடல் சடலமாக கரை ஒதுங்கியது.
அகதிகள் படகு மூழ்கியது: 100 பேரின் கதி என்ன?
 
மேலும், இந்த விபத்தில் கடலில் மூழ்கிய 100 அகதிகளின் நிலைமை என்ன என்பது இன்னும் தெரியவில்லை. உயிரிழப்பு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. படகில் நிறைய பயணிகள் பயணித்தால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.