பரிதாபங்கள் கோபிக்கு பெண் குழந்தை… ரசிகர்கள் வாழ்த்து மழை!
தமிழில் யுடியூப் சேனல்கள் பிரபலம் ஆன காலத்தில் இருந்து சூப்பர் ஸ்டார்களாக வலம் வருபவர்கள் கோபியும் சுதாகரும். இவர்கள் இருவரும் முதலில் மெட்ராஸ் செண்ட்ரல் சேனலில் இணைந்து வீடியோக்களைப் போட்டு வைரல் ஆகினர். பின்னர் தனியாக பரிதாபங்கள் என்ற சேனலை தொடங்கி நடத்தி வருகின்றனர். அது தவிர சில படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. இந்நிலையில் இப்போது கோபி தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை கோபி இன்ஸ்டாகிராமில் பதிவிட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.