உடல் எடை குறைப்பு சிகிச்சை செய்த இளம்பெண் பலி!
ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஷானன் போவ் உடல் எடை குறைப்புக்கு சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில்,பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஷானன் போவ்(28). இவர் ததன் உடல் எடையைக் குறைப்பதற்காக துருக்கியில் உள்ள பிரபல மையத்தில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.
இச்சிகிச்சையில் ஒருபகுதியாக அவருக்கு இரைப்பை பேண்ட் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இது உணவின் அளவைக் குறைக்க வயிற்றின் மேல்பகுதியில் பேண்ட் வைக்கும் முறையாகும்.
இந்த சிகிச்சை மேற்கொண்ட ஷானன் போவ், திடீரென்று உயிரிழந்தார். . இதை காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகச் செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.
மேலும், ஷானன் போவின் மறைவுக்கு அவரது காதலர் ரோஸ் ஸ்டிர்லிங்க தன் ஃபேஸ்புக் பக்கத்தில் இரங்கல் பதிவிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.