1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. World cup T20 West indies beat by Scotland

ஸ்காட்லாந்து அணியிடம் படுதோல்வி அடைந்த மே.இ.தீவுகள்: ரசிகர்கள் அதிர்ச்சி!

wi vs scot
நேற்று இலங்கை அணியை நமீபியா அணி தோற்கடித்து ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில் இன்று மேற்கிந்திய தீவுகள் அணியை ஸ்காட்லாந்து அணி படுதோல்வி அடையச் செய்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
இன்றைய டி20 உலகக் கோப்பை முதல் சுற்றுப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் ஸ்காட்லாந்து அணி மோதின. இந்த போட்டிகள் ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது
 
இதனையடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி 161 என்ற இலக்கை நோக்கி விளையாடி நிலையில் அந்த அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்கள் மட்டுமே எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த முறை உலகக் கோப்பை டி20 போட்டியில் சின்ன அணிகள் அபாரமாக வெற்றி பெற்றுவருவது கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 

Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
உலகக்கோப்பை டி20 முதல் சுற்று: மே.இ.தீவுகளுக்கு சவாலான இலக்கை கொடுத்த ஸ்காட்லாந்து!