செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 26 ஜூலை 2025 (09:33 IST)

முதல்வர் ஸ்டாலினுக்கு 'பேஸ் மேக்கர்' கருவி பொருத்தம்.. எப்போது டிஸ்சார்ஜ்?

முதல்வர் ஸ்டாலினுக்கு  'பேஸ் மேக்கர்' கருவி பொருத்தம்.. எப்போது டிஸ்சார்ஜ்?
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு இதயத்துடிப்பை சீராக்கும் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
முதல்வருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் சீரற்ற இதயத் துடிப்பு இருந்ததால், இந்தக் கருவி பொருத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹைதராபாத்தில் இருந்து வந்த இதய மின்னியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் நரசிம்மன் இந்த கருவியை பொருத்தியதாகவும் கூறப்படுகிறது.
 
இந்தக் கருவி முதல்வரின் அன்றாட நடவடிக்கைகளை சிறப்பாக செய்ய உதவும் வகையிலும், அவரது உடல்நிலையைச் சீராக வைத்திருக்கவும் உதவும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
தற்போது முதலமைச்சர் நலமுடன் இருப்பதாகவும், இன்று அல்லது நாளை அவர் வீடு திரும்புவார் என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
 
Edited by Mahendran