வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 12 செப்டம்பர் 2022 (08:01 IST)

பிரதமர் மோடியின் 1000க்கும் அதிகமான பரிசுகள்! – ஏலத்தில் விற்க முடிவு!

பிரதமர் மோடிக்கு பல்வேறு தலைவர்களும், சாமான்யர்களும் அளித்த பரிசுகளை ஏலத்தில் விட உள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி 8 ஆண்டு காலமாக நீடித்து வரும் நிலையில் பல்வேறு நாடுகளுக்கும், இந்திய மாநிலங்களுக்கும் தொடர்ந்து பயணம் செய்து வருகிறார். தொடர்ந்து அவ்வாறு பயணிக்கும் பிரதமர் மோடிக்கு உலக நாட்டு தலைவர்களும், மாநில முதல்வர்களும், அரசியல் கட்சி தலைவருகளும், சாமான்ய மக்களும் கூட ஏராளமான பரிசுப் பொருட்களை வழங்குகின்றனர்.


அவ்வாறாக பெற்ற பரிசுப் பொருட்களை ஏற்கனவே பிரதமர் மோடி ஏலத்தில் விற்று அதில் வரும் பணத்தை மக்கள் நல திட்டங்களுக்கு அளித்துள்ளார். அதுபோல தற்போது மீண்டும் ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் பிரதமர் மோடிக்கு பரிசாக அளிக்கப்பட்ட 1,200க்கும் அதிகமான பொருட்கள் ஏல விற்பனைக்கு வருகின்றது.
Modi Gifts

அதில் மத்திய பிரதேச முதல்வர் அளித்த ராணி கமலாபாதி சிலை, யோகி ஆதித்யநாத் பரிசளித்த அனுமான் சிலை, இமாச்சல பிரதேச முதல்வர் அளித்த திரிசூலம், ஆந்திர முதல்வர் அளித்த ஏழுமலையான் படம் உள்பட, டிசர்ட், ஈட்டி, பதக்கம், புத்தகங்கள், ஓவியங்கள், கைவினைப் பொருட்கள் என ரூ.100 முதல் ரூ.10 லட்சம் வரை மதிப்பிலான ஏராளமான பொருட்கள் உள்ளன.

இந்த பொருட்கள் ஆன்லைனில் ப்ரத்யேக இணையதளம் வாயிலாக செப்டம்பர் 17ம் தேதி தொடங்கி அக்டோபர் 2ம் தேதி வரை ஏல முறையில் விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.