வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 13 ஜூலை 2019 (18:09 IST)

116 மணிநேரம் பாத்ரூமில் இருந்த நபர்: காரணம் என்ன?

பெல்ஜியம் நாட்டில், பாத் ரூமில் 116 மணி நேரமாக ஒரு நபர் இருந்துள்ளார். இந்த விசித்திரமான முயற்சிக்கு காரணம் என்ன?

பெல்ஜியம் நாட்டின் ஆஸ்டெண்ட் பகுதியைச் சேர்ந்தவர் ஜிம்மி டி பிரானே. இவர் 165 மணி நேரம் பாத் ரூமில் இருக்க திட்டம் தீட்டினார். ஆனால் 116 மணி நேரங்களிலேயே வெளியே வந்துள்ளார். ஏன் இப்படி செய்தீர்கள் என கேட்டதற்கு அவர் கூறிய காரணம் வேடிக்கையாக உள்ளது.

அதாவது அவருக்கு தன்னை தானே கேலி செய்து கொள்வது மிகவும் பிடிக்குமாம். ஆதலால் இவ்வாறு பாத்ரூமிற்குள் 165 மணி நேரங்கள் இருப்பதாக திட்டம் தீட்டினாராம். மேலும் மக்கள் தன்னை கேலி செய்வதை விடவும் தான் விரும்புவது வேறு எதுவும் இல்லை எனவும் கூறியுள்ளார்.

முன்னதாக ஒருவர் 100 மணி நேரங்கள் பாத்ரூமில் அமர்ந்ததாக கேள்விப்பட்ட அவர், அந்த சாதனையை முறியடிப்பதற்காக 165 மணி நேரம் பாத்ரூமில் அமர திட்டம் தீட்டி, 116 மணிநேரங்கள் அமர்ந்ததாக கூறுகிறார். இந்த முயற்சி அதிகாரப்பூர்வமாக கின்னஸ் உலக சாதனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.