1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: சனி, 9 ஜூலை 2016 (12:08 IST)

ஐநா உத்தரவை நிறைவேற்ற முடியாது: சிறிசேனா திட்டவட்டம்

ஐநா உத்தரவை நிறைவேற்ற முடியாது என இலங்கை அதிபர் சிறிசேனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
 

 
கடந்த சில வருடங்களுக்கு முன்பு, இலங்கையில், விடுதலைப்புலிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே கடும் போர் நடைபெற்றது. அப்போது அப்பாவி மக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். இதில், இலங்கை அரசு போர்க்குற்றம் செய்துள்ளதாக பல்வேறு மனித உரிமைப்புகளும் புகார் தெரிவித்து வந்தன.
 
இந்த நிலையில், சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், விசாரணைக் குழுவில் வெளிநாட்டு அதிகாரிகள் மற்றும் நீதிபதிகள் இடம் பெற வேண்டும் என்றும் உலகத்தில் உள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. மேலும், இந்த கோரிக்கைக்கு வலு சேர்க்கும் விதமாக, ஐநா மனித உரிமைக் குழு தீர்மானம் நிறைவேற்றியது.
 
இந்த நிலையில், இலங்கை அதிபர் சிறிசேனா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ஐநா விசாரணைக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கப்போவதில்லை. ஆனால், நான் அதிபராக இருக்கும்வரை இலங்கையில் வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது.
 
மேலும், இலங்கையின் சுதந்திரம், இறையாண்மைக்கு எதிரான எந்த செயலையும் அனுமதிக்க முடியாது என்றார்.