செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: வெள்ளி, 5 ஜனவரி 2018 (16:16 IST)

காமெடி நடிகர் சூரியின் மகனும் சினிமாவில் நடிக்கிறார்...

காமெடி நடிகர் சூரியின் மகனான சர்வன், சினிமாவில் நடித்துள்ளார்.
சுசீந்திரன் இயக்கத்தில் ரிலீஸான ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தில் இடம்பெற்ற பரோட்டா காமெடி மூலம் புகழ்பெற்றவர் சூரி. அதன்பிறகு சுசீந்திரன் இயக்கிய எல்லாப் படங்களிலும் சூரி இடம்பெற்றிருப்பார். சில படங்களில் கெஸ்ட் ரோலிலாவது  இடம்பெற்றிருப்பார்.
 
இந்நிலையில், சூரியின் மகனான சர்வனையும் தன்னுடைய படத்தில் அறிமுகப்படுத்துகிறார் சுசீந்திரன். தான் இயக்கிவரும் ‘ஏஞ்சலினா’ படத்தில், சூரியுடன் சேர்ந்து சர்வனும் நடித்துள்ளார்.
 
‘குழந்தைகளை இயக்குவது தனக்குப் பிடித்தமானது. சூரியின் குழந்தையை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி’ எனத்  தெரிவித்துள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.