1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 28 டிசம்பர் 2018 (12:27 IST)

சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய அதிபர் : நெஞ்சை உருக்கும் சம்பவம்

ரஷ்யாவில் ஒரு சிறுவன்(10) வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் அவனது ஆசையை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நிறைவெற்றி வைத்து அந்த சிறுவனின் மனதில் மட்டுமல்லாமல் மக்கள் அனைவரின் நெஞ்சிலும் இடம்பிடித்து பாராட்டுக்களை பெற்று வருகிறார்.
ரஷ்யாவில் வசிக்கும் பத்து வயது சிறுவனுக்கு ஒரு வித்தியாசமான நோய் ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறான். 
 
அந்த சிறுவனுக்கு நீண்ட நாட்களாக ரஷ்ய அதிபர் புதினுடன் கைக்குலுக்க வேண்டுன் என்ற ஆசை இருந்துள்ளது. இந்த தகவல் ரஷ்யாவில் உள்ள பிரபலமான ஒருவர் மூலம் அதிபர் புதினுக்கு தெரியவர... அவர் சிறுவனை அதிபர் மாளிகைக்கு வரவழைத்து விருந்து உபசரித்ததுடன் சிறுவனுடன் கைக்குலுக்கி அவனது ஆசையை நிறைவேற்றி வைத்தார்.
 
சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய  அதிபரின் மனித நேயத்தை அந்நாட்டு மக்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.