வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 24 டிசம்பர் 2018 (06:42 IST)

வெங்கையா நாயுடு துணை பிரதமரா? அமைச்சரின் பேச்சால் பரபரப்பு

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை துணை பிரதமர் என தமிழக அமைச்சர் ஒருவர் கூட்டம் ஒன்றில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டிப்பட்டி சட்டப்பேரவை தொகுதி அ.தி.மு.க. செயல் வீரா்கள் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. துணைமுதல்வா் ஓ.பன்னீா்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சா் விஜயபாஸ்கா், வனத்துறை அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

இந்த கூட்டத்தில் பேசிய தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் 'துணை ஜனாதிபதி வெங்கயா நாயுடு என்று கூறுவதற்கு பதிலாக துணைபிரதமா் வெங்கையா நாயுடு என்று குறிப்பிட்டார். உடனே  மேடையில் இருந்த துணைமுதல்வா், சுகாதாரத்துறை அமைச்சா் ஆகியோர் அவருடைய தவறை சுட்டிக்காட்டினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே இதே அமைச்சர் தான் அப்பல்லோவில் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என்று பொய் கூறியதாகவும், ஜெயலலிதா இறக்க வேண்டியவரே இல்லை, சசிகலா கும்பல் கொள்ளையடித்த வேதனையால்தான் இறந்தார் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.