1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : புதன், 27 நவம்பர் 2019 (18:45 IST)

செய்தியாளரை துரத்திக் கடித்த பன்றி.. அப்படி என்ன தான் கோபம் ? வைரல் வீடியோ

கிரீஸ் நாட்டில், ஒரு செய்தியாளரை பன்றி ஒன்று துரத்திக் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிரீஸ் நாட்டில் சமீபத்தில் புயல் தாக்குதலை உண்டாக்கியதால் , அதுகுறித்த செய்திகளைச் சேகரிக்க, ANTI என்ற செய்திச் சேனலின் நிருபர் லாப்ஸோஸ் மாண்டிகோஸ் கினீடியா என்ற பகுதிக்குசெ சென்றார். 
 
அங்கு தனது நேரலையை ஆரம்பித்த போது, அவர் கேமராவுக்கு முன் இல்லாமல் இருப்பதைப் பார்த்து, செய்தியாளர் கோபித்தார்.
 
அந்த சமயம் பார்த்து, ஒரு பண்ணையில் இருந்து தப்பித்து வந்த பன்றி ஒன்று மாண்டிகோஸை விடாமல் துரத்திக் கடித்தபடி இருந்தது. 

 
அதை மக்களுக்கும் நேரடியாக காண்பிக்கப்பட்டது. அதனால் உள்ளூரில் நேர்ந்த புயல் பற்றி மக்களுக்கு தெரிவிக்கவில்லை. இதற்க்காக அந்த டிவி சேனல் மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது .

மேலும் , இந்த செய்திகளை தொகுத்து வழங்கியவர்கள் அந்த நேரலையைப் பார்த்து வெடித்துச் சிரித்து விட்டனர்.