திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 17 ஜூன் 2021 (17:27 IST)

ஞாபகமறதியாக மனைவியை மீண்டும் திருமணம் செய்துகொண்ட அமெரிக்கர்!

ஞாபக மறதி நோயால் அவதிப்பட்டு வந்த அமெரிக்கர் ஒருவர் ஞாபக மறதியாக தனது மனைவியை மீண்டும் திருமணம் செய்து கொண்டதாக அவரது மனைவி பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் கடந்த 12 ஆண்டுகளாக ஞாபக மறதி நோயால் தவித்து வருகிறார்.அவருக்கு முந்தைய நிமிடம் என்ன நடந்தது என்பது ஞாபகம் இருக்காது. இந்த நிலையில் டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென அதில் திருமண காட்சி வந்தது உடனே அருகில் இருந்தால் என்னிடம் நாம் அதேபோன்று திருமணம் செய்து கொள்ளலாமா? என்று தனது கணவர் தன்னிடம் கூறியதாக அவருடைய மனைவி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் 
 
அவரும் சம்மதித்து கணவருடன் மீண்டும் திருமணம் செய்துகொண்டார். ஞாபக மறதி காரணமாக தன்னுடைய மனைவியை 12 ஆண்டுகள் கழித்து 2-வது முறையாக திருமணம் செய்து கொண்ட அமெரிக்கர் குறித்த இந்த தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது