அஜித் பட நடிகருக்கு விரைவில் திருமணம்....

Sinoj| Last Modified வியாழன், 10 ஜூன் 2021 (18:18 IST)

தமிழ் சினிமாவில் நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரனுக்கு விரையில் திருமணம் நடக்கவுள்ளதாக அவரது தந்தை கங்கை கூறியுள்ளார்.

பிரபல பாடலாசிரியரும் இயக்குநரும் பாடலாசிரியருமான கங்கை அமரனின் மகன் பிரேம் ஜி அமரன். இவரும் நடிகர் இசையமைப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டுள்ளார்.


வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்த படத்தில் அஜித்துடன் இணைந்து பிரேம் ஜி அமரன் நடித்துள்ளார்.தற்போது இவரது அண்ணன் இயக்கி வரும் மாநாடு என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் கடந்தாண்டு ஒரு பேட்டியளித்தார். அதில், என் வீட்டில் எனக்கு திருமணமே வேண்டாம் என கூறிவிட்டேன். வாழ்க்கையில் நிம்மதியாக வாழ நிம்மதியாகவும் ஜாலியாகவும் வாழ விரும்புகிறேன். அதனால் நமக்கு எதுக்கு கலியாணம் குழந்தை குட்டி எல்லாம் …தனியாக இருப்பதே மகிழ்ச்சி என தெரிவித்தார்.


இந்நிலையில் சமீபத்தில் அவரது தாய் மறைவை அடுத்து, அவருக்கு விரைவில் திருமணம் நடத்த உள்ளதாக அவரது அப்பா கங்கை அமரன் கூறியுள்ளார்.

அப்பாவின் பேச்சைக் கேட்டு, பிரேம்ஜி அமரன் திருமணத்திற்கு சம்மதம் கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :