1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (11:05 IST)

தன் partner-வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்!

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருகிறார். கமர்ஷியல் ஹிட் படங்களில் நடித்து வந்த அவருக்கு நடிகை சாவித்ரியின் பயோபிக்கான நடிகையர் திலகம் புதிய பரிணாமத்தைக் கொடுத்தது. கீர்த்தி சுரேஷின் நடிப்பை அந்தப் படம் அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றது. இதனால், தனது அடுத்த படத்தை மிகவும் கவனமாக அவர் தேர்வு செய்து வருகிறார்.

இதற்கிடையில் கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் பாஜக கட்சியுடன் மிகவும் நெருக்கம் உடையவராக கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ் குமார், பாஜக கட்சியின் கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவரை கீர்த்திக்கு திருமணம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அதற்கு கீர்த்தியும் க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் பரவி தலைப்பு செய்தியாக பேசப்பட்டது.


இந்நிலையில் இந்த வதந்திகளுக்கெல்லாம் ஸ்மூத் ஆக முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கீர்த்தி. தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்ஸில் தனது செல்ல பிராணி நாய்குட்டியுடன் சூரிய அஸ்தமனத்தை ரசிப்பது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டு " with my quarantine partner" என கூறி திருமண செய்திகள் பரவியது பற்றி தனக்கு தெரியாதது போலவே கூலாக பதிவிட்டுள்ளார்.