நீண்ட ஆண்டுகளுக்கு பின்னர் ஜப்பான் பிரதமர் தென்கொரியாவுக்கு பயணம்
ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா 2 நாள் பயணமாக தென்கொரியாவுக்குப் பயணம் சென்றுள்ளார்.
வடகொரியா நாடு தொடர் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவதால், அருகிலுள்ள நாடுகள் அச்சமடைந்துள்ளன. ஏவுகணை சோதனைகளால் கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் நீடித்து வருவதால், ஜப்பான், தென்கொரொயா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து கூட்டுப்பயிற்சி நடத்தின.
இந்த நிலையில், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா 12 ஆண்டுகளுக்குப் பிறகு 2 நாள் பயணமாக தென்கொரியா பயணம் சென்றுள்ளார்.
தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோலை சந்தித்து இரு நாட்டு உறவுகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பின்போது, வடகொரியாவின் அணுசக்திட்டம் பற்றியும் விவாதிக்க உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.