1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 19 டிசம்பர் 2018 (17:46 IST)

ஹிட்லர் பெயரைச் சூட்டியதால் வந்த விபரீதம் ...

லண்டன் மாநகரத்தில் வசித்த வந்த ஒரு தம்பதியினர் தங்கள் குழந்தைக்கு ஹிட்லர் பெயரைச் சூட்டியதால் போலீஸார் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






இரண்டாம்  உலகப் போரில் உலகையே கதி கலங்க வைத்தவர் ஹிட்டர். ஜெர்மனியில் நாஜி கட்சியை நிறுவி சர்வதிகார போக்கில் அரசாங்கத்தை நடத்தி, ஒட்டுமொத்த யூத மக்களையும் கொல்லத் துடித்து  வரலாற்றில் கறையாகப் படிந்துள்ளார்.
 
பிரிட்டனில் கிளாடியா, பெட்டாதஸ் தம்பதியினர் தம் குழந்தைக்கு ஹிட்லர் என்று பெயர் வைத்துள்ளனர். அதற்காக அந்நாட்டுப் போலீஸாரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரிட்டனின் சட்டத்திற்கு எதிராகச் செயல்பட்டதாக தங்கள் குழந்தைக்குப் பேர் வைத்ததற்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின்றன.
 
அதில்லாமல் யூதமக்களுக்கு எதிராகக் கலகம் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதற்காகத்தான் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் விசாரணையில் கூறியுள்ளனர்.
 
இச்சம்பவம் பிரிட்டனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.