1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 15 டிசம்பர் 2018 (08:25 IST)

ரோட்டில் ஆறாக ஓடிய சாக்லேட் – பொதுமக்கள் அதிர்ச்சி

ஜெர்மனியில் வெஸ்டன் நகரில் உள்ள சாக்லேட் தொழிற்சாலையின் அருகே உள்ள சாலையில் சாக்லேட் ஆறாக ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனியில் உள்ள வெஸ்டன் நகரில் சாக்லேட் பேக்டரி ஒன்று அமைந்துள்ளது. இங்கிருந்து உற்பத்தியாகும் சாக்லேட்கள் நாடு முழுவதும் விநியோகிக்கப்படுகின்றன. மேலும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த தொழிற்சாலைக்கு அருகில் உள்ள சாலைகளில் திடீரென பாதித் தயாரிப்பில் இருந்த சாக்லேட்கள் வழிய ஆரம்பித்தன. சிறிது நேரத்தில் பரவிய சாக்லேட் ஆறாக ஓட ஆரம்பித்தது. இதனால் பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து சம்மந்தப்பட்ட தொழிற்சாலை நிர்வாகம் கூறியாதவது ‘ தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சாக்லேட் டேங்க் கீழே விழுந்து உடைந்ததால் இந்த நிகழ்வு நடந்துள்ளது. இதனால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்திற்காக வருந்துகிறோம். விரைவில் தவறுகள் சரிசெய்யப்படும். எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ளப்படும்’ எனத் தெரிவித்துள்ளனர்.