திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 17 நவம்பர் 2020 (18:40 IST)

வெள்ளத்தில் அடித்துப் போன பெண்ணைக் காப்பாற்றிய முதியவர்!! ஒரே நாளில் ஹீரோவாக பிரபலம் !

சீனா நாட்டில் பிரிட்டிஷ் துணைத்தூதர் ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு பெண்ணைக் காப்பாற்றி தன் மனிதநேயத்தால் ஒரே நாளில் அந்நாட்டில் ஹீரோவாகி விட்டார்.

சீனா நாட்டிலுள்ள சோங்கிங்கில்  புதிய துணைத்தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர் ஸ்டீபன் எலிசன்(61).

இவர் கடந்த சனிக்கிழமை அன்று நகருக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு பிரசித்தி பெற்ற ஆறான ஜாங்ஷானில் உள்ள ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அங்கு நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த, ஒரு மாணவி தவறி விழுந்தார்.

அருகில் உள்ளவர்கள் பதறிப்போய் கூச்சலிட்டார்களே தவிர யாரு அப்பெண்ணைக் காப்பாற்ற முன்வரவில்லை.