வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinojkiyan
Last Modified: புதன், 13 நவம்பர் 2019 (19:00 IST)

காட்டுத்தீயை அணைக்க வந்த ஹெலிகாப்டர் ...கீழே விழுந்து நொறுங்கியது....

ஆஸ்திரேலியா நாட்டில் பிரிஸ்பேனில் காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று தரையில் விழுந்து நொறுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா நாட்டில், வறண்ட வானிலை நிலவுவதால் அங்குள்ள வனப்பகுதிகளில் காட்டுத்தீ பரவி வருகிறது. இதனை அணைக்கும் பணில் அந்த நாட்டு பேரிடர் மீட்பு படையினர் மற்றும், தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.
 
இந்நிலையில், இன்று, ஹெலிகாப்டரில் தண்ணீரில் நிரப்பி தீயை அணைக்கும்  முயற்சியில் ஈடுப்பட்டனர். அப்போது, திடீரென ஹெலிகாப்டர்ட் தரைடில் விழுந்து நொறுங்கியது.
 
இந்த சம்பத்தில் விமானு  சிறிய காயத்துடன் தப்பித்துக்கொண்டதாக ச்தகவல்கள் தெரிவிக்கின்றன.