இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி: ஆஸ்திரேலியா அபார வெற்றி!

Last Modified ஞாயிறு, 27 அக்டோபர் 2019 (18:49 IST)

சமீபத்தில் பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்த இலங்கை கிரிக்கெட் அணி வெற்றியுடன் நாடு திரும்பிய நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ளது 
 
இன்று அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அபாரமாக 134 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய ஆஸ்திரேலிய அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 233 ரன்கள் எடுத்தது. டேவிட் வார்னர் மிக அபாரமாக விளையாடி சதம் அடித்தார். பின்ச் 64 ரன்களும் மாக்ஸ்வெல் 62 ரன்களும் எடுத்தனர் 
 
இதனை அடுத்து 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 99 ரன்களை எடுத்தது. அதாவது வார்னர் எடுத்த 100 ரன்களைக் கூட இலங்கை அணியின் ஒட்டுமொத்த வீரர்களும் சேர்ந்து எடுக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது 
 
டேவிட் வார்னர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது


இதில் மேலும் படிக்கவும் :