செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 13 செப்டம்பர் 2018 (13:52 IST)

சிறைக்குள் இருந்தபடி வேட்பாளரை நியமித்த பிரேசிலின் முன்னாள் அதிபர்

லூலா சார்பாக நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக அவர் தேர்தலில் நிற்கப்போவதில்லை என்று அறிவித்துவிட்டார்.

பிரேசிலின் முன்னாள் அதிபர் லூலா தற்போது ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனவே அவர் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட அந்த நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இருப்பினும், அவர் சார்பாக நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக அவர் தேர்தலில் நிற்கப்போவதில்லை என்று அறிவித்துவிட்டார்.

தன் தொழிலாளர் கட்சியிம் சார்பில் பெர்னாண்டோ ஹத்தாத் என்பவரை  களம் இறக்கப் போவதாக சிறையில் இருந்த படியே லூலா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில்: ”அக்டோபர் 7ம் தேதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை.எனது பிரதிநிதியாக பெர்னாண்டோ ஹத்தாத் தேர்தல் களத்தில் நிற்பார். நமதுகட்சியின் வேட்பாளர் பெர்னாண்டோ ஹத்தாத் ”என அவர் தெரிவித்திருக்கிறார்.