”டிக்கியை காட்டுங்க மேடம்..!” ”முடியாது சார்.. வீடியோ எடுக்காதீங்க!” – போலீஸாருடன் நிவேதா பேத்துராஜ் வாக்குவாதம்?
பிரபல நடிகை நிவேதா பேத்துராஜ் போலீஸாரிடம் வாக்குவாதம் செய்வதாக வெளியாகியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் நிவேதா பேத்துராஜ். ஒருநாள் கூத்து, பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் மேலும் சில தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். தற்போது நிவேதா பேத்துராஜ் குறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அதில் இரண்டு போலீஸார் நிவேதா பேத்துராஜ் காரை நிறுத்தி அவரை விசாரிக்கின்றனர். அவர் பேசுவதில் சந்தேகம் அடைந்த அவர்கள் கார் டிக்கியை திறந்து காட்ட சொல்கிறார்கள். ஆனால் அதற்கு நிவேதா பேத்துராஜ் மறுக்கிறார். மேலும் இந்த சம்பவத்தை ஒருவர் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கையில் ஏன் வீடியோ எடுக்கிறீர்கள்? என கேட்டு கையால் அந்த கேமராவை மறைக்கிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில் நிவேதா பேத்துராஜ் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினாரா? டிக்கியை காட்ட அவர் மறுத்தது ஏன்? கார் டிக்கியில் அவர் ஏதாவது பதுக்கியிருந்தாரா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆனால் அதேசமயம் இது ஏதாவது ஒரு படத்தின் ஷூட்டிங் காட்சிகளாகவும் இருக்கலாம் என நெட்டிசன்கள் சிலர் சந்தேகம் தெரிவிக்கின்றனர். அதில் காவலர் உடையில் இருந்த நபர் ஷூ அணியாமல் ரப்பர் செருப்பு அணிந்திருக்கிறார். மேலும் நிவேதா பேத்துராஜ் சாதாரணமாக பேசுவது போல இல்லாமல் படத்தில் நடிப்பது போன்ற தோரணையில்தான் அதில் பேசுகிறார். அதனால் அது ஷூட்டிங் வீடியோவாக இருக்கலாம். ட்ரெண்டிங்கிற்காக யாராவது ஷேர் செய்திருக்கலாம் என்றும் பேசிக் கொள்கிறார்கள்.
Edit by Prasanth.K