திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (09:32 IST)

அடுக்கு மாடியில் இருந்து குழந்தைகளை வீசி கொன்ற கொடூர தம்பதி! மரண தண்டனை விதித்து உத்தரவு!

Born Child
சீனாவில் குழந்தைகளை மாடியில் இருந்து வீசிக் கொடூரமாக கொலை செய்த தம்பதியருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.



சீனாவை சேர்ந்த ஜாங் போ என்பவர் சென் மெய்லின் என்ற பெண்ணை காதலித்து சில ஆண்டுகள் முன்னதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகளும், 1 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்ததால் பிரிந்து வாழ்வது என முடிவெடுத்து பிரிந்து சென்றனர்.

இருவரும் பிரிந்த நிலையில் குழந்தைகள் மட்டும் ஜாங் போவிடம் வளர்ந்து வந்துள்ளன. இந்நிலையில் ஜாங்கை செங்சென் என்ற ஒரு பெண் காதலித்துள்ளார். இருவரும் பின்னர் திருமணம் செய்து கொண்ட நிலையில் முன்னாள் மனைவியின் இரு குழந்தைகளும் தனது காதல் வாழ்க்கைக்கு தொல்லையாக இருப்பதாக அடிக்கடி ஜாங்கிடம் கூறி வந்துள்ளார் செங்சென்.


இதனால் அந்த குழந்தைகளை தீர்த்துக்கட்ட முடிவெடுத்த இருவரும் குழந்தைகளை 15வது மாடியில் இருந்து தூக்கி வீசி கொடூரமாக கொலை செய்துள்ளனர். போலீஸ் விசாரணையில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தபோது தவறி விழுந்துவிட்டதாக பொய் சொல்லியுள்ளனர். ஆனால் தீவிரமான விசாரணையில் அவர்கள் குழந்தைகளை தூக்கி வீசி ஈவு இரக்கமின்றி கொன்றது உறுதியானது. அதையடுத்து அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் விஷ ஊசி செலுத்தப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K