வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 15 ஜூலை 2019 (21:28 IST)

மீன் பிடிக்க 900 கிமீட்டர் பயணம் செய்த சிறுவர்கள் ..மடக்கிப் பிடித்த போலீஸார் !

ஆஸ்திரேலியா நாட்டில் மீன் பிடிக்க செல்வதற்காக விட்டில் பெற்றோரிடமிருந்து பணம் மற்றும் காரை திருடிச் சென்ற சிறுமியை அவள் நண்பர்கள் 3பேருடன் போலீஸார் கண்டிபிடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் பொதுவாக  17 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதில்லை.  இந்நிலையில், குவீன்ஸ்லாந்து மாநிலத்தின் உள்ள  கிரேஸ்மேர் பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமி மற்றும் 3 சிறுவர்கள் தங்கள் பெற்றோருக்கு, உறவினர்களுக்குத் தெரியாமல் தொலைதூரமாகச் சென்று  மீன்பிடிக்க ஆசைபட்டு அதன்படி மூயற்சிகளிலும் ஈடுபட்டனர். 
 
பின்னர் இதில் ஒருவர் தன் வீட்டில் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு கிளம்பிச் செல்வதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு புறப்பட்டார்.
 
அந்த சிறுவர்களில் இன்னொருவர் தன்  வீட்டில் உள்ள காரை எடுத்துக்கொண்டு இவர்கள் நால்வரும் குவீன்ஸ்லாந்தில் இருந்து . மீன்பிடி தூண்டில்களுடன் மீன் பிடிக்கும் இடத்திற்குக் காரில் சென்றனர்.
 
இதில் என்ன  ஒரு திரில் என்றால் சில நூரு கிலோமீட்டரில் காரில் பெட்ரோல் காலி ஆகிவிடுவது போலிருக்க... ஆளில்லாத ஒரு பங்கில் பெட்ரோலை நிரப்பிவிட்டி இவர்கள் 4 பேரும் ஒரிவருக்கொருஇவர் காரை மாற்றி, மாற்றி ஓட்டியவாறு சுமார் 900 கிலோமீட்டர் தூரத்தை கடந்து நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்துக்கு வந்தடைந்தனர்.
 
சிறுவர்கள் கார் ஓட்டிவருவதைக் கண்ட போலீஸார் அவர்களை பலோ செய்து,,அவர்களை பிடித்து வைத்து அவர்களின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது போலீஸார் அவர்களிடம் விசாரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகிறது.