செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 13 ஜூலை 2019 (12:59 IST)

முதலையை கடித்து முழுங்கிய மலைப்பாம்பு: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

ஆஸ்திரேலியாவில் மலைப் பாம்பு ஒன்று, முதலையை கடித்து விழுங்கிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல புகைபடக் கலைஞர் மார்ட்டின் முல்லர், அடர்ந்த காடுகளில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஆற்றுப் பக்கமாக ஒரு முதலை வலம் வந்துகொண்டிருந்தது. அந்த நேரத்தில் ஒரு அனகோண்டா பாம்பு, அந்த முதலையை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தது.

பின்பு மெதுவாக ஊர்ந்து வந்து, முதலையை தன் உடலால் முதலில் சுருட்டியது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக கடித்து தின்றே கொன்றது. இதனை ஒரு நிமிடம் கூட விடாது புகைப்பட கலைஞர் முல்லர், தன் கேமராவால் படம்பிடித்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த அனகோண்டா பாம்பு, மேற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பகுதியில் காணப்படும், ஆலிவ் பைத்தான் வகையைச் சார்ந்தது என்றும், இது 13 அடி நீளம் வளரக்கூடிய தன்மை கொண்டது எனவும் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.