"தோனி ஒரு ஜீனியஸ்"...ஆஸ்திரேலியா கேப்டன் புகழாரம்

Last Updated: சனி, 13 ஜூலை 2019 (16:00 IST)
இந்திய கிரிக்கெட் அணி வீரர் தோனி, ஒரு ஜீனியஸ் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் புகழ்ந்து கூறியுள்ளார்.

உலகக் கோப்பை தொடரில், நியூஸிலாந்திற்கு எதிரான அரையிறுதி போட்டியில், இந்தியா படுமோசமான தோல்வியை கண்டது. மேலும் இந்த போட்டியில் கிரிக்கெட் வீரர் தோனி, 50 ரன்களை குவித்து ரன் அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து, இந்தியாவின் தோல்விக்கு காரணம் தோனி தான் என பரவலாக கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தோனி குறித்து, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக், நியூஸிலாந்திற்கு எதிரான அரையிறுதி போட்டியில், தோனி அவுட் ஆகாமல் இருந்திருந்தால், நிச்சயமாக இந்திய அணியை வெற்றி பெற வைத்திருப்பார் என்றும், தோனி கிரிக்கெட்டின் ஜீனியஸ் என்றும் புகழந்துள்ளார்.


மேலும், தோனி இல்லை என்றால் பல போட்டிகளில், இந்திய அணி வென்றிருக்க வாய்ப்பில்லை எனவும், மேலும் ஒரு நாள் போட்டிகளில், இந்திய அணியின் மற்ற வீரர்களை விட அவர் சிறப்பாவே விளையாடி உள்ளார் எனவும் புகழ்ந்து தள்ளினார்.

”நாம் அனைவரும் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். தோனி ஒரு சிறந்த வீரர். மிடில் ஆர்டரில் அவர் இருக்கும் வரை, அணியில் உள்ள அனைவருக்கும் விளையாட வாய்ப்பளிக்கிறார்’ என்று ஆஸிதிரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் குறியுள்ளது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :