வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 20 ஜனவரி 2018 (14:53 IST)

குங்பூ பாணியில் நெருப்பை அணைக்க முயன்ற சிறுவன்; 40 வாகனங்கள் எரிந்து நாசம்(வைரல் வீடியோ)

சீனாவைச் சேர்ந்த சிறுவன் குங்பூ பாணியில் தீயை அணைக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக 40 இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமாகின.
தற்காப்பு கலையான குங்பூ மீது மிகவும் ஆர்வம் கொண்டிருந்த, சீனாவின் ஷான்சி மாகாணத்தைச் சேர்ந்த சிறுவன் குங்பூ படங்களில் வருவது போல கடந்த சில தினங்களுக்கு முன் தீயை கையால் அணைக்க முயற்சி செய்தான். பார்க்கிங்கில் உள்ள இருசக்கர வாகனம் மீது மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தி அதனை குங்பூ பாணியில் அணைக்க முயன்றான். தீ அணையாததால் அதிருப்தி அடைந்த சிறுவன் மெழுவர்த்தியை அணைக்காமல் சென்று விட்டான்.  தீ பரவி பார்க்கிங்கில் இருந்த 40 இருசக்கர வாகனங்களை எரித்து நாசமாக்கியது. தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இந்த எதிர்பாராத விபத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 
 
சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு சிறுவனின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டு அங்கு ஏற்பட்ட சேதங்களுக்கு 9.5 லட்சம் ரூபாய் இழப்பீடு பெறப்பட்டது. இதனால் அப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

நன்றி; CGTN