1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 14 செப்டம்பர் 2023 (10:07 IST)

இந்திய மாணவியை கொன்றுவிட்டு சிரித்த அமெரிக்க போலீஸ்காரர்! – வீடியோ வெளியானதால் பரபரப்பு!

Justice for Jhanvi
அமெரிக்காவுக்கு படிக்க சென்ற இந்திய மாணவி மீது காரை ஏற்றிக் கொன்றுவிட்டு கேஷுவலாக சிரித்த அமெரிக்க காவலரின் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



அமெரிக்காவின் சியாட்டில் மாகாணத்தில் உள்ள நார்த் ஈஸ்ட் பல்கலைகழகத்தில் கல்லூரி உயர்படிப்பு படித்து வந்தவர் இந்தியாவை சேர்ந்த ஜான்வி கண்டுலா. கடந்த ஜனவரி 23ம் தேதியன்று இவர் சாலையை கடந்தபோது வேகமாக வந்த கார் மோதியதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தவர் சியாட்டில் காவல்துறை டெபுடி டேனியல் ஆடரர். மாணவி இறந்ததற்காக வருத்தம் தெரிவித்து சியாட்டில் காவல்துறை நோட்டீஸ் வெளியிட்டிருந்தது. இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடந்து வந்த நிலையில் தற்போது விபத்து ஏற்படுத்தியபோது காவலர் டேனியர் ஆடரர் காரில் எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

அதில் மாணவி மீது மோதியதும் எந்த பதற்றமும் இல்லாமல், கவலையும் இல்லாமல் சிரித்துக் கொண்டே டேனியல் பேசுவது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. மேலும் மாணவியை குறிப்பிட்டு “அவளுக்கு குறைந்த மதிப்புதான்” என்று சொல்லி சிரித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் ஜான்விக்கு ஆதரவாக #JusticeForJaahnavi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

ஜான்வி இறப்பிற்கு காரணமாக போலீஸ் அதிகாரி டேனியல் மீது கடும் நடவடிக்கை எடுக்க இந்திய அரசும் வலியுறுத்த வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Edit by Prasanth.K