1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2023 (17:52 IST)

200 அடி உயர ராட்சச ரோலர் கோஸ்டர் பாதியிலேயே நின்றதால் பரபரப்பு

America
அமெரிக்காவின் ஓஹோயோ மாகாணத்தில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் 200 அடி உயர ராட்சச ரோலர் கோஸ்டர் பாதியிலேயே நின்றதால் அதில் இருந்த மக்கள் மரண பீதியடைந்தனர்.

அமெரிக்க நாட்டில் அதிபர்  ஜோ பைன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள ஓஹோயோ மாகாணத்தில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்தப் பொழுதுபோக்கு பூங்காவிற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து விளையாடி மகிழ்வர்.

இந்த நிலியில், இங்குள்ள 200 அடி உயர ராட்சச ரோலர் கோஸ்டரில் வழக்கம் போல் மக்கள் ஏறினர். அந்த ரோலஸ் கோஸ்டர் உயரத்திற்குச் சென்று திடீரென்று பாதியிலேயே நின்றது.

இதனால், அதில் அமர்ந்திருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், மரண பயத்தில் அருகே இருந்த படிக்கட்டுகளில் நடந்து வந்தனர்.

இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.