கொரோனா வைரஸை தடுக்க மந்திரம்: தலாய்லாமா
சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் பயமுறுத்தி வரும் கொரோனா வைரசை தடுக்க மந்திரம் உச்சரிக்க வேண்டும் என புத்த மத தலைவர் தலாய் லாமா கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகமாக உள்ளது. அதே போல் சுமார் 5000 பேர் இந்த வைரஸால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சீனாவிலிருந்து செய்திகள் வெளிவந்துள்ளது
கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்து தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்
இந்த நிலையில் கொரோனா வைரஸை தடுக்க சீனர்கள் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்று புத்த மதத் தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளதார். இதுகுறித்து அவர் தனது பேஸ்புக்கில் ஓம் தாரே தத்தாரே துரே சோஹா’ என்ற மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்தால் கொரோனா வைரஸ் பரவாது என்றும் அந்த வைரஸை கட்டுப்படுத்தும் முடியும் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து இந்த மந்திரம் சீனாவில் பெருமளவில் பரவி வருவதாக கூறப்படுகிறது
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த விஞ்ஞானிகள் மட்டும் மருத்துவர்களே திணறி வரும் நிலையில் ஒரு மந்திரம் அந்த வைரஸை கட்டுப்படுத்துமா? என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்