வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (00:50 IST)

பறக்கும் டாக்ஸி: துபாய் இளவரசரின் சூப்பர் திட்டம்

உலகில் வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஒன்று துபாய். அதனால் தான் அந்நாட்டில் விண்ணை முட்டும் கட்டிடங்களும், அனைத்துவித வசதிகளும் டெக்னாலஜி மூலம் செய்யப்பட்டு வருகிறது.



 
 
இந்த நிலையில் இன்று அந்நாட்டில் பறக்கும் டாக்ஸி சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை துபாய் இளவரசர் ஹம்தன்பின் முகமது அவர்கள் உறுதிசெய்துள்ளார். இதுகுறித்த தகவலை அவர் தனது டுவிட்டரில் படத்துடன் பதிவு செய்துள்ளார்.
 
நாளைய டெக்னாலஜிகளை நாங்கள் இன்றே அறிமுகப்படுத்துவதில் பெருமை அடைகிறோம் என்றும் அவர் டுவிட்டரில் கூறியுள்ளார். இந்த பறக்கும் டாக்ஸி சோதனை முயற்சிகளில் வெற்றி பெற்றால் மிக விரைவில் டாக்ஸிகள் விண்ணில் பறக்கும் என்பது குறிப்பிடத்தக்கது