வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 27 ஜூன் 2017 (22:22 IST)

மீராவை தேடிப்பிடிச்சு கூட்டிகிட்டு வாங்க! விஷால் கட்டளை

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'துப்பறிவாளன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் விரைவில் லிங்குசாமி இயக்கும் 'சண்டக்கோழி 2' படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.



 


இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடிக்கவுள்ள நிலையில் இந்த படத்தின் முதல் பாகத்தில் நடித்த மீரா ஜாஸ்மினும் திரைக்கதைப்படி சில காட்சிகளுக்காக தேவைப்படுகிறாராம்.

ஆனால் எஞ்சினியரை திருமணம் துபாயில் செட்டில் ஆகிவிட்ட மீரா ஜாஸ்மின் மீண்டும் சினிமாவில் நடிக்க விருப்பமில்லை என்று கூறி வருகிறாராம். ஆனால் விஷால் நேரடியாக துபாய்க்கு தனது உதவியாளரை அனுப்பி எப்படியாவது மீரா ஜாஸ்மினை சம்மதிக்க வைத்து அழைத்து வர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளாராம்

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாகவும், 2018 பொங்கல் தினத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.