வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (07:40 IST)

79 மாடி கட்டிடத்தில் திடீர் தீ விபத்து: துபாயில் பரபரப்பு

உலகின் மிக உயர்ந்த கட்டிடங்களில் ஒன்றான துபாயில் உள்ள டார்ச் டவர் என்ற கட்டிடத்தில் நேற்றிரவு திடீரென தீப்பிடித்ததால் அந்த பகுதியே பெரும் பரபரப்பில் உள்ளது. கட்டிடத்தின் 9வது மாடியில் முதலில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், அதிக காற்று காரணமாக இந்த தீ அடுத்தடுத்த மாடிகளுக்கும் பரவி வருவதாகவும் துபாய் தொலைக்காட்சிகளின் நேரடி ஒளிபரப்பு செய்தி கூறுகின்றது



 
 
இந்த தீவிபத்து குறித்த தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தீ விபத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை என்பது முதல் கட்டத் தகவல்கள் ஆகும்
 
ஏற்கனவே இதே கட்டிடத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு தீப்பிடித்த நிலையில் தற்போது மீண்டும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோவை துபாய் மக்கள் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.